தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து. சின்மயி பல ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் அளித்தார்.
இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சின்மயி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வைரமுத்துவைப் பற்றி பலமுறை மோசமான கருத்துக்களை வெளியிட்டு அவரைத் திட்டினார்.
மகளிர் தினத்தையொட்டி வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களைப் பற்றிய கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு சின்மயி காம வெறியர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வைரமுத்தை அசிங்கமாக பேசியுள்ளார்.
இதோ போஸ்ட்.
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்க்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.
மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்உலக
மகளிர் திருநாள் வாழ்த்து#மகளிர்தினம் | #WomensDay— வைரமுத்து (@Vairamuthu) March 8, 2023