நடிகைகள் மீனா மற்றும் சினேகா ஆகியோர் பெண்கள் தினத்தை தங்கள் தோழிகளுடன் சிறப்பாக கொண்டாடினர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, ரஜினிகாந்த் ஜோடியாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் பிரபலமானார். மீனா திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை சமீபத்தில் சென்னையில் “மீனா 40” என்ற பெயரில் ஒரு நிகழ்வு பிரமாண்டமாக கொண்டாடியது. இதில் பல முக்கிய நடிகர்களும் கலந்து கொண்டனர். 1990களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய மீனா, என் ராசா கிமனசிலே படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். இதுமட்டுமின்றி, ரஜினிகாந்துக்கு ஜோடியாக எஜமான் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்தும் பேசப்பட்டது.
நடிகை மீனா, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை மீனா, தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும், துயரங்களையும் கடந்து இன்றும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகைகள் மீனா மற்றும் சினேகா ஆகியோர் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை தங்கள் தோழிகளுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.