சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் தனுஷ் நடித்த வாத்தி பாடலுக்கான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற வா.. வாத்தி.. எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த பாடலுக்கான வீடியோவை சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் வெளியிட்டுள்ளார்.
அவர் சம்யுக்தா மேனன் போன்ற புடவையை அணிந்து, படத்தில் பாடல் வரிகளுடன் இணைந்து பாடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பலரால் பார்க்கப்பட்டுள்ளன.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீதேவி அசோக். அவர் விஜய் டிவியில் கருங்கென்ன வெளி, காற்றுக்கென்ன வேலி, ராஜா ராணி, சன் தொலைக்காட்சியின் பூவே உனக்காக ஆகிய தொடர்களில் தோன்றியுள்ளார்.