பிப்ரவரி 15ஆம் தேதி காலை, அசாமின் சங்காச்சலில் பிளாஸ்டிக் பையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றிய அசாம் போலீசார், விசாரணை நடத்தி, இறந்தவர் சென்னை அதியாவை சேர்ந்த பந்தனா ஸ்ரீ என்பதை உறுதி செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய பல்வேறு விசாரணையில், அசாமின் ஜான்சிபூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தை சேர்ந்த கர்னல் நிலை அதிகாரி ஒருவரே கொலை செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவால் ஏற்பட்ட பிரச்னையால், கொலை செய்தது தெரிய வந்தது. பந்தனா ஸ்ரீயின் குழந்தை ரயிலில் கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பகுதியில் கைவிடப்பட்டதும் தெரியவந்தது. இவை அனைத்தையும் செல்போன் மூலம் உறுதி செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.