பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாடகை வீட்டு உரிமையாளர் கோரிய செக்யூரிட்டி டெபாசிட் தொகையை செலுத்த பணம் தேவைப்படுவதால் கிட்னி விற்பனைக்கு சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.
பெங்களூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க தேவைப்படும் அளவுக்கு அதிகமான செக்யூரிட்டி டெபாசிட்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில சந்தை ஆய்வுகளின்படி, பெங்களூரு நில உரிமையாளர்கள் தங்கள் குத்தகைதாரர்களிடமிருந்து அதிக வாடகை மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை கோருகின்றனர்.
இந்த அவல நிலையை சித்தரிக்கும் இளைஞரின் கிண்டல் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ரம்யாக் ஜெயின் என்ற இணையவாசி கிண்டலான இந்தப் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், அந்த போஸ்டரில், “இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது. வீட்டு உரிமையாளர்கள் கேட்கும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு நிதியளிக்க பணம் வேண்டும்.” என்று முதலில் எழுதப்பட்டிருந்தது.
அனால் அதற்கு கீழே, “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், ஆனால் எனக்கு இந்திராநகரில் ஒரு வீடு வேண்டும், எனது சுயவிவரத்தை அறிந்துகொள்ள இதனை ஸ்கேன் செய்யவும்” என்று போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.
பலமுறை முயற்சித்தும், ஐடி நகரில் வாடகைக்கு இடம் கிடைக்காததால், ரம்யாக் இந்த கிண்டலான வழியைக் கண்டுபிடித்தார். இந்திராநகரில் ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது கடினம், இந்த சுவரொட்டிகள் எனக்கு உதவும் என்று அவர் கூறினார்.
இந்த போஸ்டர்கள் பெங்களூரில் தங்குவதற்கு இடம் கிடைப்பதில் உள்ள சிரமம் குறித்து மீண்டும் ஒரு சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
Does this qualify for @peakbengaluru? pic.twitter.com/GGuMZXy2iH
— Ramyakh (@ramyakh) February 25, 2023