Other News

ஆசை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்..

98243380

பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். ஆனால், படம் பாதியில் நிறுத்தப்பட்டது. பல இன்னல்களை தாண்டி, தமிழில் செல்வா இயக்கிய “அமராவதி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அஜித். ஆனால், இப்படம் அஜித்துக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்தார். இந்தப் படம் அஜித்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்கள் அவரை ஆசை நாயகன் அஜித் என்று அழைக்க ஆரம்பித்தனர்

ஆசை பிறகு, காதல் கோட்டை மற்றும் காதல் மன்னன் போன்ற காதல் படங்களில் அஜித் தொடர்ந்து தோன்றினார். இந்த படத்தின் மூலம், அவர் பல பெண் ரசிகர்களைப் பெற்றார். வெற்றி பெற போராடிய அஜித்துக்கு இந்த வெற்றிகள் புதிய உத்வேகத்தை அளித்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களில் ஒருவராக அஜித் உருவெடுத்துள்ளார். அந்த நேரத்தில், அரவிந்த் சாமிக்குப் பிறகு அதிக பெண் ரசிகர்களைக் கொண்ட நடிகரானார் அஜித். அதற்கு மிக முக்கியமான காரணம் அவரது காதல் படங்களின் வெற்றி. அஜீத் அதன் பிறகு ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்98243380

ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற  காதல் படங்களில் நடித்த அஜித்துக்கு வாலிபடம் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அஜித்துக்கு இரண்டு வேடங்கள். படத்தின் வெற்றி அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு அமர்க்களம், வில்லன், அட்டகாசம், வரலாறு போன்ற அதிரடி படங்களிலும் வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களிலும் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார் அஜித்.

இந்நிலையில் 100 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி வரும் அஜித் ஆசை படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் முதல் வெற்றிப்படமான ஆசை படத்திற்காக 25,000 சம்பளம் வாங்கினார். மணிரத்னம் தயாரித்த ‘ஆசை’ படத்துக்கு  முதல் சம்பளம் 15,000 பேசப்பட்டதாம். ஆனால் அப்போது அஜித்துக்கு சம்பளமாக 25,000 கொடுக்கப்பட்டது. இந்நிலையில், என்னதான் ஆசை படத்தில் பெரிய வெற்றி பெற்றாலும் அஜித்துக்கு பதிலாக நடிகர் சுரேஷ் டப்பிங் பேசியிருப்பார். இது அஜித்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற்றாலும் அதை நம் குரலில் டப்பிங் செய்ய முடியவில்லையே என்று அஜித் வருத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நகைச்சுவை நடிகரின் மகனுக்கு சப் கலெக்டர் பதவி

nathan

காதலனால் புரோக்கராக மாறிய மாணவி சக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்

nathan

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

nathan

திருமண நாளை கொண்டாடிய ஆர்யா – சாயிஷா தம்பதி….புகைப்படங்கள்….!!!!!

nathan

நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.??

nathan

காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள்

nathan

சமந்தாவை கொடுமைப்படுத்திய நாக சைதன்யா:சித்ரவதை, கருக்கலைப்பு

nathan

அட்லீ மனைவி பிரியாவின் முதல் மகன்!! இவ்வளவு பெரிய பையனா..புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

nathan

புதுமண தம்பதி விபத்தில் பலி; பைக்கில் மாமியார் வீட்டிற்கு சென்றபோது சோகம்

nathan