நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.கன்னட பிலிம்ஸ் கன்னடம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த வசூலை குவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றது.
[monsterinsights_popular_posts_inline]
கர்நாடகாவில் வாழும் பழங்குடியின மக்களின் மத வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. அதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழா நேற்று (பிப்ரவரி 20) மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.