நடிகர் பிரபு தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன். 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு. ஆளுமையை புரிந்து செயல்படக்கூடியவர். தன் இயல்பான நடிப்பால் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். தற்போது அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்தார்.[monsterinsights_popular_posts_inline]
இந்நிலையில் நடிகர் பிரபு சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பிரபு நேற்று (பிப்ரவரி 20) இரவு சென்னை கோடம்பாக்கம் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[monsterinsights_popular_posts_inline]
அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அதை அகற்ற நேற்று காலை யூரித்ரோஸ்கோபிக் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளார். அறுவைசிகிச்சைக்குப் பின் – பொதுச் சோதனைக்குப் பிறகு, ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்.[monsterinsights_popular_posts_inline]