கணவன் மற்றும் குழந்தைகளை கைவிட்டு காதலனுடன் பெண் ஒருவர் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சேலம் செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் சவுண்டப்பன். வீட்டில் பட்டு நெசவு தொழில் செய்து வருகிறேன். இவரது மனைவி லட்சுமி. 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தனபால் பக்கத்து வீட்டில் பட்டு நெசவு செய்யும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனர். அவரும், லட்சுமியும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த வழக்கப்படி ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றனர்.
இதனையடுத்து லட்சிமியின் கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. அப்போது லட்சிமியை அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அதில், அவரது குழந்தைகளும், கணவனும் தங்களுடன் வீட்டுக்கு வருமாறு கதறி அழுது இருக்கிறார்கள்.
ஆனால், அந்த பெண், தன் கணவர் இல்லாமல் தனபாலுடன் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவரை காதலனுடன் அனுப்ப மறுத்த போலீசார், லட்சுமியை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் தனபாலின் மனைவி கணவருடன் வருமாறு வற்புறுத்தியதை அடுத்து போலீசார் தனபாலை மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர்.