ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இந்திராணி தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார்.
8 முறை 16 வயது சிறுமி கர்ப்பம்! தாயே உடந்தை….பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சிறுமிக்கு 12 வயதை எட்டியவுடன் வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்பட்டுள்ளது.
மகளின் கருமுட்டையை விற்ற தாய்
தாயான இந்திராணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார்.
ஒரு கருமுட்டை வழங்கினால் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பிறகு அதே போல் ஒரே மகள் என பாராமல் இந்திராணியும் சையத்தும் சேர்ந்து சிறுமியின் கருமுட்டையையும் விற்றுள்ளனர்.
தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த 16 வயது சிறுமியை 22 வயது என பொய்யாக வயதை குறிப்பிட்டு பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்றுள்ளனர்.
8 முறை 16 வயது சிறுமி கர்ப்பம்! தாயே உடந்தை….பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
இவர்களுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்த நிலையில் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி உட்பட மீதும் போலீசார் வழக்கு பதிந்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.