Other News

இந்த ராசி ஆண்கள் காதலராக இருப்பதை விட கணவராக சிறந்தவர்களாக இருப்பார்களாம்…

cover 1641382519

அனைத்து பெண்களுக்குமே சிறந்த கணவர் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்கும் அது கிடைக்கிறதா என்றால் துரதிர்ஷ்டவசமாக இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் நல்ல காதலராக இருக்கும் ஆண்கள் அனைவருமே நல்ல கணவராக இருந்து விடுவதில்லை. நல்ல கணவராக இருப்பதற்கென சில தனிப்பட்ட தகுதிகளும், குணாதிசியங்களும் வேண்டும்.

சிறந்த கணவர்களைக் கண்டறிய ஜோதிடம் உதவியாக இருக்கும். சில ராசிகளில் பிறந்த ஆண்கள் காதலராக இருப்பதை விட கணவராக இருக்கும்போது அதிக அக்கறையுடனும், பொறுப்புடனும் முக்கியமாக நேர்மையுடனும் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி ஆண்கள் மிகவும் நம்பகமானவர்கள் மற்றும் மிகவும் விசுவாசமானவர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் விரும்பும் ஒருவருக்காக எதையும் செய்வார்கள். இவர்கள் காதலில் விதிவிலக்கானவர்கள், ஏனெனில் இவர்கள் ரொமான்டிக்காக காதலிப்பதை விட உறவில் உண்மையாக இருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தரமான குணம் என்னவெனில் வெளிப்படையா பேசுவதும், தீவிரமாக நேர்மையாக இருப்பதும்தான். தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக வாழ்வதையே இவர்கள் இலட்சியமாகக் கொண்டவர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் மற்றும் அவர்கள் எந்த உறவிலும் முழுமையாக ஈடுபடுகிறார்கள். தங்கள் துணையை ஒவ்வொரு தருணத்திலும் ஆச்சரியப்படுத்த முயற்சிப்பார்கள் அதில் வெற்றியும் காண்பார்கள். மீன ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வமுள்ள மற்றும் அன்பான பெற்றோரை உருவாக்குகிறார்கள். தங்கள் துணைக்கு அனைத்து வேலைகளிலும் உறுதுணையாக இருப்பார்கள். மீன ராசிக்காரருடன் இருக்கும்போது, உங்கள் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம், அது மிகவும் வேடிக்கையானதாக மற்றும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

கடகம்

இவர்கள் பெரும்பாலும் வெளியிடங்களில் சுற்றுவதை விட தங்களின் துணை மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு அனைத்தையும் விட குடும்பம்தான் முக்கியம். தங்கள் துணையின் அனைத்து முடிவுகளுக்கும் இவர்கள் எப்போதும் துணையாக இருப்பார்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், இது அவர்களை கூடுதல் ரொமான்டிக்காக மாற்றுகிறது. நீங்கள் கூச்சலிட்டால் அல்லது அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் கோபமடையலாம், ஆனால் உங்களை காயப்படுத்தியதற்காக குற்ற உணர்ச்சியையும் உணருவார்கள். சிறந்த கணவராக இருப்பதுடன் அற்புதமான தந்தையாகவும் இவர்கள் இருப்பார்கள்.

தனுசு

மிக அதிக அக்கறையும், அன்பும் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தங்கள் துணையை மகிழ்விக்க அனைத்துத் தந்திரங்களையும் முயற்சிப்பார்கள். அடிப்படையில், அவர்களின் உலகம் தங்கள் துணையைச் சுற்றியே சுழல்கிறது என்று அவர்கள் உணர்கிறார்கள். எனவே அவர்களை காயப்படுத்துவதையோ அல்லது வருத்தப்படுவதையோ அவர்களால் தாங்க முடியாது. இவர்கள் கொஞ்சம் பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் அது தங்கள் உறவை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள் மற்றும் அன்பு நிறைந்த இதயத்தைக் கொண்டவர்கள்.

சிம்மம்

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ விரும்பினால் அதற்கு நீங்கள் சிம்ம ராசிக்காரர்களைத் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஆண்கள் மிகவும் அக்கறையுள்ளவர்கள், மிக முக்கியமாக, அவர்கள் அற்புதமான நகைச்சுவை உணர்வைக் கொண்டுள்ளனர். இவர்களுடன் இருக்கும்போது உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. இதனாலேயே இவர்கள் மீது உங்களுக்கு கோபம் வராது. நகைச்சுவை உணர்வைத் தவிர, சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள், எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்

ஆச்சரியமளிக்கும் விதமாக, மகர ராசி ஆண்கள் மிகவும் விசுவாசமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அன்பானவர்கள். காதலிக்கும் போது இவர்கள் இந்த குணங்களை வெளிக்காட்டாமல் இருக்கலாம், ஆனால் திருமணத்திற்குப் பிறகு இவர்கள் நிச்சயம் மாறுவார்கள். தங்கள் துணையின் இதயத்தை வெல்ல எதையும் செய்வார்கள் மேலும் தங்கள் மொத்த கவனத்தையும், நேரத்தையும் தங்கள் துணைக்காக அர்பணிப்பார்கள். மகர ராசி ஆண்கள் மிகவும் வசீகரமானவர்கள், இதனால் இவர்களை பாதுகாத்து வைப்பதே இவர்களின் துணைக்கு பெரிய வேலையாக இருக்கும்.

Related posts

மனைவி முகத்தை பார்க்க கூச்சப்பட்ட இயக்குநர்! சில்க் ஸ்மிதாவுடன் ஒரு இரவு..

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒருவர் அடிக்கடி கிரீன் டீ குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

பாக்கியலக்ஷ்மி சீரியல் நடிகை ராதிகாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?? நீங்களே பாருங்க.!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கின்றதா? அப்போ உங்கள் எதிர்காலம் இப்படி தான் இருக்குமாம்

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? மேலாடையை கழட்டி விட்டு மொத்தமும் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஸ்ரேயா..!

nathan

உங்க ராசிப்படி நீங்க எந்த ராசிக்காரங்கள கல்யாணம் பண்ணுனா… அமோகமா இருக்கும் தெரியுமா?

nathan

விஜய் கூட செய்யாத மரியாதையை, மூன்றாவது மனிதனாக செய்த வம்சி..

nathan

மயில்சாமியின் நினைவேந்தல் – நடிகர் பார்த்திபன் செய்த செயல்!!

nathan

கீர்த்தி சுரேஷ் காதலர் எந்த ஊர், என்ன வேலை பார்க்கிறார்

nathan