தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அஜித்குமார். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் 62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று விமான நிலையம் சென்ற அஜித் குமாரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.