பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலங்களில் லாஸ்லியும் ஒருவர், அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றபோது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்குப் பெயரும் புகழும் மட்டுமின்றி பட வாய்ப்பும் கிடைத்தது.
படிப்பை முடித்துவிட்டு ஐடி துறையில் பணிபுரிந்த அவர், அந்த வேலையை விட்டுவிட்டு 2012ல் சக்தி டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கினார். அந்த தொலைக்காட்சியில் ‘குட் மார்னிங் ஸ்ரீலங்கா’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இதனால் அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
பின்னர், விஜய் டிவியில் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும், லாஸ்லியா திறமையாக விளையாடி, கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார், அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவின் மீது காதல் கொண்டவர் போல் நடித்தார்.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவின் யாரென்று தெரியாதது போல் நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவருடன் பிரண்ட்ஷிப்படத்தில் ஹர்பஜன் சிங் இணைந்து நடித்தார். மேலும் அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விடுமுறையைக் கழிக்க வெளிநாடு சென்றுள்ள லாஸ்லயே , தற்போது பல்வேறு படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.