Other News

உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்!

உலகின் முன்னணி பத்திரிகையான டைம்ஸ் தொடங்கி சிறு பத்திரிகைகள், வலைதளங்கள், அழகுசாதனப் பொருள் நிறுவனங்கள் வரை நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்களின் பெயரை உலகின் அழகான பெண்மணி என்று பட்டியலிடுவர்.
சில வலைதளங்கள் இப்போது கூட ஜெனிஃபர் லோபஸை உலகின் அழகி என போற்றிப்பாடுகிறது. சிஎன்பிசிடிவி 18 போன்ற செய்தித் தளங்கள் பெல்லா ஹதித், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளைப் பட்டியலிடுகிறது. சில வலைதளங்கள் ஜூலியா ராபர்ட்ஸை உலகின் அழகிய பெண்மணி எனக் கொண்டாடுகிறது.இப்படி உலக அழகிகளின் பட்டியல் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அழகு என்பது எப்போதுமே பார்ப்பவரின் கண்களைப் பொருத்தது. நம் கண்ணுக்கு அழகாகத் தெரிபவர்கள், வேறு ஒருவரின் கண்களுக்கு அத்தனை அழகாகத் தெரியாமல் போகலாம். எனவே அழகை அளவிட பிரத்யேகமாக எந்த ஒன்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த இன்ஸ்டாகிராம் காலத்தில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டவர்கள் அழகானவர்கள் என்கிற பிம்பத்தை ஒரு தரப்பு நெட்டிசன்கள் நம்புகின்றனர். உதாரணத்துக்கு கைல் ஜென்னரைச் சொல்லலாம். சமூக வலைதளம் வெறுமனே உடல் அழகை வைத்து பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

அறிவியல் உலகமோ வேறு ஒரு அளவீட்டை முன்வைக்கிறது. அதன் பெயர் கோல்டன் ரேஷியோ.

ஒருவரின் கண், புருவம், மூக்கு, நெத்தி, உதடு, கண்ணம் என முகத்தில் உள்ள எல்லா பாகங்களும் ஒரு குறிப்பிட்ட நீள அகலத்தோடு இருந்தால் அதுவே அழகு என ஒரு பட்டியலை நம் முன் நீட்டுகிறார்கள். இதை பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் ஒருவரின் அழகைக் கணக்கிடப் பயன்படுத்தி வந்தனர் என்பது மற்றொரு சுவாரசியச் செய்தி.

அப்படி, அந்த கணக்கீடுகளோடு கண கச்சிதமாக எந்த ஒரு பெண்மணியும் ஒத்துப் போவதில்லை. கண் ஒத்துப் போனால் மூக்கு சுத்தமாக ஒத்துப் போகாது. முகத்தில் உள்ள எல்லாமே ஒத்துப் போனால் உதடு மட்டும் கோல்டன் ரேஷியோவில் எடுத்துக் கொள்ள முடியாதபடி இருக்கும்.

ஆனால் ஜோடி கார்னர் (Jodie Comer) என்கிற பிரிட்டிஷ் நடிகையின் முகம் கிட்டத்தட்ட 95 சதவீதம் (கச்சிதமாக 94.52%) இந்த கோல்டன் ரேஷியோ என்றிழைக்கப்படும் விகிதங்களோடு ஒத்துப் போவதாகப் பல சர்வதேச வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இவர் தான் உலகிலேயே மிகவும் அழகான பெண் என சில வலைதளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவரது புருவம் 89% & நெத்தி 89.5% மட்டுமே கோல்டன் ரேஷியோ உடன் குறைவாக ஒத்துப் போகிறது. மற்றபடி முகம், மூக்கின் நீள அகலம், உதடு, தாடை, மூக்கு & வாய்க்கு மத்தியில் உள்ள இடைவெளி, கண் அமைந்திருக்கும் இடம் எல்லாமே 95 சதவீதத்துக்கு மேல் ஒத்துப் போகிறதாம்.

29 வயதான ஜோடி கார்னர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘கில்லிங் ஈவ்’ என்கிற தொலைக்காட்சித் தொடர் மூலம் கொஞ்சம் பிரபலமாகியுள்ளார். இதுவரை சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்படி பெரிய படங்களோ அல்லது நடிக்கும் வாய்ப்போ கிடைக்கவில்லை.

சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் என்கிற படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகை செண்டாயா இந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தை புகழ்பெற்ற மாடல் பெல்லா ஹாதித் பிடித்திருக்கிறார். நான்காவது இடத்தை பாடகி பியான்ஸ் பிடித்திருக்கிறார். கோல்டன் ரேஷியோவில் பொருந்திப் போகும் தங்க மங்கை ஜோடி கார்னருக்கு வாழ்த்துகள்.

Related posts

நீங்க மேஷ ராசி பெண்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்!

nathan

அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை- காப்பாற்றிய இளைஞர்!

nathan

வெயில் காலம் தொடங்கியாச்சு! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

nathan

நடுவிரலை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா

nathan

‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்..

nathan

அருமையான ட்ரிக்ஸ் ! Smartphone Touch ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம்!

nathan

முன்னாள் சூப்பர் பூவையார் கார் வாங்க பணம் கொடுத்தது யார்?

nathan

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: மாப்பிள்ளை உள்பட 3 பேர் கைது

nathan

நடிகை சினேகா முதலில் காதலித்தது பிரசன்னாவை இல்லையா?..

nathan