அமீர்-பவானி திருமண தேதியை அறிவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் நடித்து பரவலாக அறியப்பட்ட ஜோடி அமீர்-பவானி.
பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக நுழைந்த அமீர், பவானியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், மேலும் பவானியை பிக்பாஸ் வீட்டில் வைத்து தனது காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருந்தார் அமீர்.
ஆனால் பவானி ஆரம்பம் முதலே மறுத்து வந்தார்.
இதையடுத்து பிக்பாஸை தொடர்ந்து “பிபி ஜோடி” சீசன் 2 நிகழ்ச்சியில் நடன ஜோடியாக கலந்து கொண்டு டைட்டிலை வென்றனர்.
இந்த bb ஜோடி முதல் முறையாக அவரது insta பக்கத்தில் பவ்னி பின்ஸ் செய்த பிறகு, நாம் ஒன்றாக நம் வாழ்க்கை பயணத்தை தொடங்கலாம். அமீர், என்றென்றும் என்னுடையவராக இருப்பாயா..ஐ லவ் யூ” என்று அமீரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார் பவானி.
இதையடுத்து இருவரும் ஜோடியாக வாழ ஆரம்பித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமீர் பவானி வரும் பிப்ரவரி 15ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram