நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் பேசும் அழகான செய்தி வாசிப்பாளராகவும், மனதைக் கவரும் கதாநாயகியாகவும் ஊடகங்களில் கால் பதித்தவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானார் மேலும் படங்களிலும் நடித்தார்.
மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ப்ரியாவின் பயணம், இப்போது பெரிய நடிகர்களுடன் படங்களில் நடிக்கும் வரை வந்துள்ளது.
கடந்த டிசம்பரில் கடற்கரையில் ஒரு புதிய வீட்டை வாங்கியதாக அறிவித்த நடிகை, ஒரு வீடியோவில் தனது புதிய தொழிலைத் தொடங்கியுள்ளார்.
அதாவது அவர் சொந்தமாக புதிய உணவகத்தை ஆரம்பித்து திறக்க உள்ளார். இந்த உணவகத்தை வீடியோ எடுத்ததற்காக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.