இதில் விஜய் நடித்த வாரிசு. ரஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், வி.டி.வி கணேஷ், சரத்குமார், யோகி பாபு, எஸ்.ஜே. சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர், இது ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தீராஜ் தயாரித்துள்ளார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ‘வரிசு’ வெற்றி கொண்டாட்டம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பங்கேற்று படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா விவேக், நடிகர் ஷாம் ஆகியோர் இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.