கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ராதாரவி. ஹீரோ, வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட ராதாரவி இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்துள்ளார்.
நேற்று முன் தினம் ராதாரவியின் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் புகைப்படங்கள் மூலம் பேத்தியின் ஆசையை நிறைவேற்றினார் ராதாரவி. உலகின் முன்னணி நடிகர்கள் சிலரின் ஆடை வடிவமைப்பாளரான பவித்ரா சதீஷ், தனது அன்பான தாத்தா ராதாரவிக்கு ஆடை வடிவமைத்தார். பேத்தியின் விருப்பத்தை மறுக்காதராதாரவி பவித்ரா சதீஷ் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலரால் மதிப்பிடப்பட்டு வருகிறது.