இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல்.
இவர் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரில் ராகுல் விளையாடவில்லை. அவர் தனது சொந்த காரணங்களுக்காக வெளியேறினார்.
இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திருமணம் குறித்த தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
கே.எல்.ராகுல்-அத்தியா ஷெட்டி திருமணம் நாளை நடைபெறுகிறது. மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று மெஹந்தி விழா நடைபெற்றது.
மகாராஷ்டிராவின் ஹில் ஸ்டேஷனில் உள்ள கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டி பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அத்திய ஷெட்டி திருமணம் நடைபெற உள்ளது.
இரு தரப்பிலிருந்தும் 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். திருமணத்தில் கலந்து கொள்ளும் யாரும் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திருமணத்தில் நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான் கான், அக்ஷய் குமார், கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் திருமணம் செய்யவிருக்கும் அதியா ஷெட்டி, 2015 முதல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.