மேற்கு வங்க மாநிலம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள வெர்டியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான அவருக்கு ஒரு மகன், பேரன் மற்றும் பேத்தி உள்ளனர்.
சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டு வேலைகள் செய்து வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தேன். அப்போது, வேலையில் இருந்து மிச்சம் இருக்கும் பொருட்களைக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வார்.
அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது.
வாழ்க்கையின் பிற்பகுதியில் வேலையை விட்டுவிட்டாலும், அவரது உணவுமுறை அப்படியே இருந்தது. அனிமாவின் உணவு தேநீர் மற்றும் சத்தான பானங்கள். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக திட உணவை உண்ணாமல் இருந்த போதிலும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
முதலில் கிராம மக்களுக்கு இது தெரியாது. அதை அறிந்ததும், அவர்கள் அதிர்ச்சியும், திகைப்பும் அடைந்தனர். ஆனால் சரியான ஊட்டச் சத்துக்களைப் பெற்றாலே போதும். திட உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு திரவ வடிவில் மட்டுமே உணவளிக்கப்படுகிறது. இது பாதிப்பில்லாதது என்று மருத்துவர்கள் கவனமாக விளக்கியுள்ளனர்.