அறுவை சிகிச்சைக்கு பிறகு மூக்கு மாறிவிட்டதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது உடல் அழகு குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், “எனது மூக்கு உடைந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து மூக்கை மாற்றினேன்.
என் முகத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்ய எனக்கு உரிமை உண்டு.
ஒவ்வொருவருக்கும் தங்கள் உடலை மாற்ற உரிமை உண்டு.
இதற்காக நான் அழகு கலை பொருட்களைப் படுத்துகிறேன் என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதை செய்யுங்கள். செய்ய விரும்பவில்லையா? அதனை செய்யாதீர்கள்.
அது உங்களுடைய விருப்பம். ஸ்ருதி ஹாசன் நடிகை போல இல்லை என்று முன்பு என்னை கிண்டல் செய்தார்கள்.
ஸ்ருதிஹாசன் நல்ல திறமை உள்ளவர் தான் ஆனால் அவர் இந்தியரை போன்று தோற்றம் அளிக்கவில்லை என்கிறார்கள். அதே நேரத்தில் நான் நடித்த பெரும்பாலான படங்களில், நான் கிராமத்து ஹீரோயின் கேரக்டரில் தான் நடித்து இருக்கிறேன்.
ஆக மொத்தம் நம்மை பற்றி ஏதாவது என்று பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என்றார்