தனது தந்தையே தங்கையை வன்கொடுமை செய்துள்ளதை அறிந்த சகோதரர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரின் ஜாலோர் சஞ்சோர் பகுதியில் சேர்ந்த தந்தை ஒருவருக்கு டீனேஜ் வயதில் மகனும், மகளும் இருந்துள்ளனர்.
குறித்த தந்தை தனது மகளை இரவில் பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். இதனை பாதிக்கப்பட்ட பெண் தனது உறவுக்கார பெண்ணுக்கு ஆடியோவாக அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய ஆடியோவில், தனது அத்தையிடம் தான் தூங்கும் போது கூட தனது தந்தை வன்கொடுமை தொல்லை கொடுக்கின்றார். போன் வாங்கித்தருவதாக கூறி தன்னை மைதானம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கும் தன்னை துன்புறுத்தியதோடு, தன்னை வீட்டை எங்கும் செல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும், தாயாரிடம் கூறினால் அவர் தன்னை திட்டுகிறார் என்று கூறியுள்ளார்.
குறித்த ஆடியோ வெளியே லீக்காகியுள்ள நிலையில், பெண்ணின் சகோதரரும் கேட்டு கலங்கியதோடு, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை சம்பவத்தினை விசாரிக்கச் சென்ற போதே, பொலிசாருக்கு குறித்த ஆடியோ விவகாரம் தெரியவந்துள்ளது. தங்கை தனது தந்தையிடம் பட்ட சித்ரவதைக்காக சகோதரர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது