பிக்பாஸ் சீசன் 6 இன்றோடு 102 நாட்கள் ஆகிறது. தற்போது 5 போட்டியாளர்கள் விளையாடி இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம், ADK வெளியேற்றப்பட்டார், மேலும் ஆறு போட்டியாளர்கள் மீதமுள்ளனர். கதிரவன் இந்த வாரம் டாஸ்க்கில்3 லட்சத்துடன் வெளியேறி இருக்கிறார். மீதமுள்ள ஐந்து பேரையும் இறுதிப் போட்டிக்கு அனுப்ப பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 21 வீரர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் தற்போது 6 போட்டியாளர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5-4 இறுதிப் போட்டியாளர்களை மட்டுமே பிக் பாஸ் தேர்வு செய்வார்.
அம்தவாணனுடன் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் அசிம், விக்ரமன், ஏடிகே, கதிரவன், மைனா, ஷிவின் ஆகியோர் அடங்குவர். மேலும் வெளியேற்றப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர், ஆயிஷா, ரக்ஷிதா மற்றும் ஜனனி ஆகிய மூவர் மட்டும் பங்கேற்கவில்லை. உள்ளே வந்த போட்டியாளர்கள் ஹவுஸ்மேட்களை தூண்டிவிட ஆரம்பித்தனர். மேலும் தியாக பணி என்ற பெயரில் இவர்கள் கொடுத்த சில பணிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. போட்டியாளர்கள் மீசையை மொட்டையடிக்கவும், பாதி தலையை மொட்டையடிக்கவும் கேட்டதாகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் பயங்கரமானவை என்றும் வெளியில் இருந்த பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து வந்த நிலையில், ஏடிகே வெளியேறினார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த 100 நாட்களில் நடந்த அனைத்து டாஸ்க்கையும் ஞாபக படுத்தும் விதமாக பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். ஷிவினை நிற்க வைத்து அவரிடம் பிக்பாஸ் சில விஷயங்களை கூறுகிறார். அதை கேட்ட அமுது கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.!