உத்தரபிரதேச மாநிலம் பதியில் உள்ள சர்வாயா பகுதியை சேர்ந்தவர் அனுராதா பிந்த். 15 வயது மாணவியான இவர், கடந்த புதன்கிழமை தனது உறவினர் நிஷாவின் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த அரவிந்த் விஸ்வகர்மா என்ற 22 வயது வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து சிறுமியை வழிமறித்தார். பின்னர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சிறுமியின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. விசாரணையில், மாணவி அனுராதாவை அரவிந்த் காதலித்துள்ளார். ஆனால், அரவிந்தின் காதலை மாணவி தொடர்ந்து மறுத்து வந்தார்.
ஆத்திரத்தில் அரவிந்த் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், தப்பியோடிய அரவிந்த் மற்றும் அவருக்கு துப்பாக்கி ஏற்பாடு செய்த அவரது கூட்டாளி சுனில் ஆகியோரை பாடி போலீசார் கைது செய்தனர். போலீசார் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
➡️घटना में शामिल दो हत्यारे चढ़े पुलिस के हत्थे
➡️कब्जे से घटना में प्रयुक्त आला कत्ल अवैध तमंचा मय खोखा कारतूस व मोटरसाइकिल बरामद pic.twitter.com/R3JALBKhTV— BHADOHI POLICE (@bhadohipolice) January 19, 2023