இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் துறவியாக தீட்சை பெற்றாள்.
உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தை தனேஷ் சங்வி நடத்தி வருகிறார்.
அவருக்கு தேவன்ஷி சங்கவி என்ற ஒன்பது வயது மகளும், நான்கு வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். இந்நிலையில், மூத்த மகள் தேவன்சி சிறுவயதிலிருந்தே துறவு வாழ்க்கையில் ஈடுபட்டதால், அவரது பெற்றோர் துறவியாக மாற ஒப்புக்கொண்டனர்.
பின்னர் சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் தீட்சை பெற்றார். தேவன்ஷியின் தீட்சைக்கு முந்தைய நாள், ஒட்டகம், யானைகள், குதிரைகள் மற்றும் பெரும் ஆரவாரத்துடன் நகரத்தில் ஒரு பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த சிறுமி துறவி 600 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று துறவியாக மாறுவதற்கு முன்னர் துறவு வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், தேவன்சி சிறுவயது முதலே தினமும் மூன்று வேளை பிரார்த்தனை செய்து எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மேலும் அவர் தொலைக்காட்சி, திரைப்படம் பார்த்ததில்லை என்றும், திருமணங்களில் கூட கலந்துகொள்ளாத நிலையில், 367 தீட்சை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதாக சங்விசின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.