ஓசூர் பெரிய மேநகரம் கிராம தொழிலாளி எல்லப்பா. இவரது 17 வயது மகன் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். சிறுவனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி மனைவி அர்ச்சனா (27) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது.
பின்னர் அது இறுதியில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அர்ச்சனா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு பையனுடன் பெங்களூரு சென்றார்.
இருவரும் போத்தனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதையடுத்து கணவன் மனைவி அர்கானாவை அங்கும் இங்கும் தேடியுள்ளார். இருக்கும் இடத்தை அறிந்த உறவினர்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பலத்த காயம் அடைந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.