இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் பல ஹிந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.
சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் மக்கள் இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்களை கொடுத்தனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன், சமீபத்தில் தனது படுக்கையறையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டார்.
அதில், “நான் போனை வைத்திருக்கும் போது தவறுதலாக கை நழுவி முகத்தில் வைத்தது. அதனால் பலமாக அடிபட்டது. உதட்டில் ரத்தம் வருகிறது பார்” என்று கூறியிருந்தார்.