கேரளாவை சேர்ந்த ஒட்டுமொத்த குடும்பமும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரமேசன் (48). வளைகுடா நாட்டில் பணிபுரிந்த இவர் கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பினார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு, 12:30 மணியளவில், ரமேஷனின் வீட்டில் தீ பற்றி எரிவதைக் கண்டு பதற்றமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், கதவை உடைத்து உள்ளே பார்த்தார்.
ரமேசன், அவரது மனைவி சூரஜா குமாரி (46), மகள் ரேஷ்மா (23) ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. கடன் பிரச்னையால் மூவரும் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனால், ரமேசன் கடும் கடனில் சிக்கித் தவித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
குடும்பம் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளதும் வெளிப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.