வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் நட்பு குறித்து நடிகர் ஷ்யாம் கூறியதாவது: “குஷி படத்தில் நடித்த பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து நடிக்கிறேன். நான் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இன்று அவர்கள் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார்கள். ஆனால் விஜய் அண்ணாவிடம் இருக்கும் அந்தப் பணிவும் அன்பும் யாரிடமும் இல்லை.
அவர் உங்களுக்கு நிறைய கற்பிப்பார். திரரங்கடியில் என்னுடைய நடிப்பைப் பாராட்டினார். விருந்துக்கு அழைத்து விருந்து வைத்தார். “வாரிசு” படத்தில் நடிப்பது குடும்பம் போல் இருந்தது. 63 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
“வாரிசு” திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது