கை வேலைகள்பொதுவானகைவினை

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

பயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல டீ ஷர்ட் துணிகள் இழுவைத் தன்மையோடு இருக்கும் என்பதோடு டீ ஷர்ட்டில் உள்ள டிசைன்கள் பொம்மைகளுக்கு புது லுக்கைத் தரும். இதோ உதாரணத்துக்கு இங்கே தந்திருக்கும் இந்த ஆமை, இருநிறங்களில் கோடுகள் போட்ட டீ ஷர்ட்டில் செய்தது. இப்படியொரு டிசைன் டீ ஷர்ட் உங்கள் வீட்டு பரணிலும் தூங்கிக்கொண்டிருக்கும், அதை தூசி தட்டி எடுத்து இதோ இப்படி மாற்றுங்கள். நீங்கள் செய்தது என்பதை நீங்கள்கூட நம்பமாட்டீர்கள். அவ்வளவு அருமையாக வரும்.சரிசெய்முறைக்குப் போவோம்.

தேவையானவை

டீ ஷர்ட் – 1

கத்தரிக்கோல்

நூல், ஊசி

பஞ்சு

செயற்கை கண்கள் அல்லது கறுப்பு பட்டன்கள்

எப்படி செய்வது?

முதலில் ஒரு பேப்பரில் ஆமையின் மாதிரியை இதோ படத்தில் உள்ளதைப்போல வரைந்து வெட்டிக்கொள்ளுங்கள். உடல் பகுதிக்கு ஒரு பெரிய வட்டம், தலைக்கு பெரிய வட்டத்தில் கால் பாக அளவில் ஒரு வட்டம், முன்னங்கால்கள் (5 செ.மீ அளவுக்கு) சற்று நீளமாகவும், பின்னங்கால்கள் அதைவிட (3 செ.மீ. அளவுக்கு) சற்று குறைந்த நீளத்திலும் வால்பகுதிக்கு ஒரு இரண்டரை செ.மீ. நீளத்திலும் பேப்பர் கட்டிங் தயார் செய்து கொள்ளுங்கள். பேப்பர் கட்டிங்குகளை வைத்து துணியில் பென்சிலால் நகல் எடுத்து ஒவ்வொரு பகுதியையும் இரண்டிரண்டாக வெட்டுங்கள்.

DSCN1677

இப்படி இரண்டிரண்டாக வெட்டிய பகுதிகள் (உடல்பகுதியைத் தவிர) ஒவ்வொன்றையும் உடலோடு இணைக்கும் பகுதியைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் பின்புறமாக சாதாரண தையல் போட்டு இணையுங்கள். தயாரான இந்தப் பகுதிகளை உடல்பகுதியோடு பஞ்சு நுழைப்பதற்கு ஒரு சிறு துளையை விட்டுவிட்டு ஒவ்வொன்றாக இணைத்துக்கொண்டு வாருங்கள். இதோ படத்தில் காட்டியுள்ளதை கவனியுங்கள்.

DSCN1680

உடல்பகுதியை தலையில் ஆரம்பித்து வால் பகுதியோடு இணைத்து முடிக்க வேண்டும். எல்லாவற்றையும் பின்புறமாக திருப்பியே செய்ய வேண்டும். வால் பகுதியை இணைக்கும் முன் பஞ்சு நுழைப்பதற்கு இரண்டு இன்ச் நீளத்திற்கு இடைவெளி விடுங்கள். இப்போது பஞ்சு நுழைக்காத ஆமை தயாராக இருக்கும்.

DSCN1681

இதை அப்படியே முன்புறமாகத் திருப்புங்கள். பஞ்சு நுழைப்பதற்கு விட்டிருக்கும் உடல் பகுதியின் வழியே தலை, கால்கள், வால் பகுதிக்குள் பஞ்சை நிரப்புங்கள். அடுத்து உடல் பகுதியை பஞ்சால் நிரப்புங்கள். முழுமையாக நுழைத்தவுடன் ஆமை தயாராகிவிட்டது. இப்போது பஞ்சு நிரப்புவதற்கு விட்ட இடைவெளியை தையல் போட்டு அடைத்துவிடுங்கள். இறுதியாக கண்களை ஃபேப்ரிக் க்ளூவால் ஒட்டுங்கள்.

DSCN1691

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button