நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும், நுங்கால் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டிறைச்சி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், ஜாமூன் 1 க்ளோப், எடை கூடும்.
சமீபத்தில் சித்த மருத்துவர் சர்மிளா மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் யூடியூப்பில் அறிவுரை வழங்கியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. அவரது கருத்துக்கு பலரும் பதிலளித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் சர்மிளா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டாக்டர் சல்மிகா தனது யூடியூப் பக்கத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.
அதில், “நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளரும்னு சொல்லிருந்தேன். நுங்கு சாப்பிட்டால் குளிர்ச்சி. அதை சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் எடை கூடினால் மார்பகங்களும் வளரும்னுதான் சொன்னேன்.
அதே போல, குப்புற படுத்தா புற்றுநோய் வரும்னு சொல்லல. பொதுவாவே உடலுக்கு ரத்த ஓட்டம் சீரா இருக்கனும். ரத்த ஓட்டம் சீரா இல்லைனா புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு.
ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டா 3 கிலோ எடை கூடும்னு ஒரு ப்ளோல சொல்லிட்டேன். 1008 பிரச்சனை இருக்கு அப்டினா 1008 பிரச்சன இருக்குனா அர்த்தம். அதுபோலதான். இனிப்பு சாப்பிட்டா எடை அதிகரிக்கும். அதைத்தான் அப்படி சொன்னேன். நானும் மனுஷிதானே. தவறுகள் நடக்கத்தான் செய்யும். இதை யாராவது தவறா எடுக்கிட்டா மன்னிச்சுருங்க” என கூறியிருந்தார்.