நடிகை ருஹானிகா தவான் பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக மக்களிடையே பிரபலமானவர். இளம் வயதிலேயே பிரபலமான நடிகை ருஹானிகா தவான், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார்.
பொதுவாக, சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது அனைவரின் பெரிய கனவாகும். குறிப்பாக நகரங்களில், வீடு வாங்குவது ஒரு பெரிய லட்சியமாக கருதப்படுகிறது. இதற்கிடையில், 15 வயதான ருஹானிகா மும்பையில் தனது சொந்த வீட்டை வாங்கினார்.
இது தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ருஹானிகா, கனவை உயிர்ப்பித்ததாகவும் கூறினார்.
மேலும் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருஹானிகா தவான் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.எனது வருமானத்தில் வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது தற்போது நிறைவேறியுள்ளது.அதில் பெருமை கொள்கிறேன்
என் பெற்றோரின் ஆசியும் வழிகாட்டுதலும் இல்லாமல் என்னால் இதைச் சாதித்திருக்க முடியாது. இன்று நான் செய்ததை நீங்களும் செய்யலாம். கனவு காணுங்கள். அதைப் பின்பற்றுங்கள். நிச்சயம் ஒருநாள் சாதிப்பேன்’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.
சீரியலில் நடித்து 15 வயதில் சொந்த வீடு வாங்கிய நடிகை ருஹானிகா தவானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.