பாகிஸ்தானில் 50 வயதான மருத்துவர் ஒருவர் தனது 60வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர், இப்போது நான்காவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் குவெட்டாவை சேர்ந்தவர் ஜெய்ன் முகமது. 50 வயதான இவர் மருத்துவராக பணிபுரிகிறார். இந்நிலையில் அவர் தற்போது 60வது முறையாக தந்தையானார்.
புத்தாண்டு தினத்தன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு குஷால் கான் என்று பெயரிட்டார். அவருக்கு பிறந்த 60 குழந்தைகளில் 5 பேர் இறந்துவிட்டனர்.
மேலும் தனக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் இருப்பதாகவும், தற்போது நான்காவது திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.