மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் பாஸ்கர் – சித்ராதேவி. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, வேலை தேடி கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றார்.
இந்த தம்பதிக்கு நர்மதா, பவித்ரா என்ற இரு மகள்களும் உள்ளனர். தகவல்களின்படி, நர்மதாவுக்கு மூன்று வயதாக இருந்தபோது, அவரது தந்தை பாஸ்கர் விபத்தில் இறந்துவிட்டார்.
இத்தகைய சூழலில், அடுத்த மூன்று ஆண்டுகளில் நர்மதாவும் அவரது சகோதரியும் மற்றொரு அதிர்ச்சிக்காக காத்திருக்கிறார்கள்.அவரது தாயும் மின்சாரம் தாக்கி உயரிழிந்த காரணத்தினால் சிறு வயதிலேயே பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளாக தவித்துள்ளனர்.
இதன் பின்னர், இரண்டு சிறுமிகளும் அனாதை இல்லத்தின் அரவணைப்பில் வளர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இருவரும் பெரிதாக வளர்ந்த நிலையில், இதில் பவித்ராவிற்கு கடந்த 4 மாதங்கள் முன்பு திருமணம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் நர்மதாவின் தாய் மாமனான கண்ணன் வரன் தேடிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. மேலும் மருமகளின் திருமணத்திற்காக நிதி உதவி திரட்டியும் வந்துள்ள கண்ணன், ஆலுவா பகுதியில் உள்ள ரவீந்திரன் என்பவரின் வீட்டிற்கு கொத்தனார் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
அங்கு கண்ணன், ரவீந்திரனிடம் மருமகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து நிதியுதவி கேட்டுள்ளார். ஆனால் ரவீந்திரன் பண உதவி செய்யாமல் நர்மதாவின் பரிதாப நிலை குறித்தும் சிந்தித்தார்.
திருமணமாகாத ராகுல் என்ற மகன் இருப்பதால், நர்மதாவை திருமணம் செய்து கொள்ள ரவீந்திரன் நினைத்ததாக தெரிகிறது.
இந்த ஏற்பாட்டைச் செய்ய அவரது மகன் ராகுல் மற்றும் முழு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருமகளின் திருமணத்திற்கு நிதியுதவி கேட்டபோது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அந்த பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொண்டது பலரை மனம் நெகிழ வைத்துள்ளது.