தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நடிகை த்ரிஷா, திரையுலகில் 20 வருட வாழ்க்கையை முடித்துள்ளார்.
சமீபத்தில் ரங்கி நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மேலும் இன்று தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்ட ஒரு பேட்டியில், பல வருடங்களாக எப்படி ஒரே ஸ்லிம்மாக இருக்கிறார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு த்ரிஷா, ‘ இந்த கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேற என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறேன் ‘ என்று கூறியுள்ளார் திரிஷா. இதுவே அவர் ஸ்லிம்மாக இருக்க காரணமாம்.