கவுகாத்தியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஹவுரி நகரத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.. பின்னர் இருவரும் செல்போன்களை பரிமாறிக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
இந்நிலையில், வருங்கால மனைவிக்கு மணமகன் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் ஷாம்பு உட்பட பல பொருட்கள் உள்ளன. இதைப் பார்த்த மணமகள் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், “இன்ஜினீயரான எனக்கு மலிவான ஷாம்பு அனுப்பியிருக்கிறாய்” என்று கூறியிருந்தார்.
இதனால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று மணமகன் பதிலளித்தார். அதிர்ச்சியடைந்த மணப்பெண், பெற்றோரிடம் கூறினார். உடனே அனைவரும் மணமகன் வீட்டிற்கு சென்று அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், அவர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், மணமகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.