நடிகை பூமிகா, இறுக்கமான கருப்பு உடையில் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி லைக் ஆகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. இவரின் முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு.. ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக ரோஜா கூட்டம், சூர்யாவுக்கு ஜோடியாக சில்லுனு ஒரு காதல் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெற்ற பிறகு, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பூமிகா, கதாபாத்திரம் சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘கொலையுதிர் காலம்’ படத்தில் நடித்தார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் பூமிகா இறுக்கமான கருப்பு உடையில் குளித்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
43 வயதிலும், நடிகை பூமிகா இன்னும் அழகாக இருக்கிறார், மேலும் அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வேறு லெவலுக்கு வைரலாகியுள்ளது.