தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். கருப்பு நிறம், கலையான முகம், தேசியப்பற்று, புள்ளி விவரத்தை கச்சிதமாக கூறும் மனிதர்.
சினிமாவில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தது போல், அரசியலிலும் ஈடுபட்டார்.
எப்போதும் மக்களுக்காக வாதிடும் விஜயகாந்த் உடல் நலம் கருதி இன்று மக்களை சந்திப்பதில்லை. இறுதியாக, சில மாதங்களுக்கு முன்பு தோன்றிய விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
அப்போது, இன்ஸ்டாகிராமில் விஜயகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் உடல் எடை குறைந்து காணப்படுகிறாரேஎன ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
View this post on Instagram