தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி.
2000களில், பிரபலமான “சக்கரக்கா பூம் பூம்” சீரியலில் கர்ணனாக நடித்ததன் மூலம் குழந்தை நடிகராக அறியப்பட்டார்.
மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 என பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் குடும்ப நண்பருமான சோஹைல் கதுரியாவை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து, ஹன்சிகா, சோஹைல் திருமணம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான மண்டோடா கோட்டை அரண்மனையில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது.
ஹன்சிகா மோத்வானியின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் இவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
ஹன்சிகா மற்றும் சோஹைல் ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு ஹன்சிகா மோத்வானி பெரி ரசோய் விழாவில் பங்கேற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் திருமணத்திற்கு முந்தைய புகைப்படம் ஒன்றை கலர்ஃபுல்லாக பகிர்ந்துள்ளார். இருவரும் பழங்கால கார்களில் திருமண ஊர்வலத்தில் வந்தனர்.
இந்த புகைப்படங்களில் ஹன்சிகா மற்றும் சோஹைலின் நண்பர்கள் குழுவும் உள்ளது. இந்த போட்டோ ஷூட்டை கப் கேக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நடத்தியது.