நடிகர் விஷாலுக்கு தற்போது 45 வயதாகிறது. அவர் இன்னும் திருமணமாகாதவர் இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் சில காரணங்களால் திருமணம் முறிந்தது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறி வருகிறார்.
மேலும் திருமணம் பற்றி அவரிடம் சில வருடங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினால் ஆர்யா திருமணம் செய்யட்டும் அதன் பின் நான் செய்கிறேன் என பதில் கூறுவார். ஆனால் தற்போது ஆர்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போதும் விஷால் திருமணம் செய்யவில்லை.
இதுபற்றி சமீபத்தில் அவரிடம் கேட்டபோது, ”இப்போது பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளட்டும். அன்றே திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறி சமாளித்துவிட்டார்.