கணவன் ஐரோப்பிய நாட்டில் பணிபுரியும் போது யாழில் மனைவிக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்த போது மனைவி தனது காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நடுக்கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக வெளியேறியதாக கைது செய்யப்பட்டவர்களில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் அவரது கணவர்,வெளிநாட்டில் இருக்க தனது காதலருடன் கப்பலில் ஏறினார்.
பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது. அவரது உறக்கமற்ற உழைக்கும் குடும்பத்தை காப்பாற்ற அவர் ஓடிக்கொண்டிருக்கையில் ,, அவரது மனைவி வேறொருவருடன் கனடாவுக்குப் பயணம் செய்தார்.
இந்நிலையில் கணவன் மனைவியை அழைக்க தயாராக இருந்த போது இப்படியொரு சம்பவம் நடந்ததாக புலம்பும் வீடியோ ஒன்றுவெளியாகியுள்ளது..
கணவனை ஏமாற்றி பெரும் தொகையை பெற்றுக் கொண்ட பெண்ணுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.