நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு ‘பிரியாணி’, ‘சிங்கம் 2’ போன்ற படங்களில் நடித்தார்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தொழிலதிபர் சோகெலை மணந்தார் ஹன்சிகா.
இந்நிலையில் ஹன்சிகா திருமணமான 10 நாட்களில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
நீண்ட நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் இறுதியாக விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.