1857 இல், ஒரு கப்பல் பனாமாவிலிருந்து நியூயார்க் நகரத்திற்குச் சென்றது. 425 பேருடன் சென்ற கப்பல் சூறாவளியில் சிக்கி திடீரென மூழ்கியது.
வட கரோலினா கடற்கரையில் கப்பல் விபத்துக்குள்ளானதில், 165 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீன் பேன்ட்கள் கனரக சுரங்கத் தொழிலாளர்களின் தொழிலுக்கு பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஜீன்ஸ் பேண்ட்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது தயாரிக்கப்பட்ட, ஐந்து பட்டன்கள் கொண்ட இந்த வெள்ளை ஜீன்ஸ் பேண்ட்கள் 1 லட்சத்து 14 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 94 லட்சத்திற்கு ஏலம் போனது.