தம்பதிகள் ராம்சரண் மற்றும் உபாசனா விரைவில் பெற்றோராக உள்ளனர் என்ற செய்தியால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. அவரது மகன் ராம் சரண் தற்போது டோலிவுட்டில் முன்னணி கதாபாத்திரத்தில் வலம் வருகிறார். ராம்சரண் மற்றும் உபாசனா காமினேனி 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை.
சில மாதங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூட ராம்சரண் மனைவி தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறி வந்தார்.இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
உபாசனாவின் இந்த பேட்டி வைரலானது. இந்நிலையில், அந்த பேட்டியை செய்த ஐந்தே மாதத்தில், ராம்சரண்-உபாசனா தம்பதியினர் மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளனர். இருவரும் விரைவில் பெற்றோராகப் போவதாகத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தாத்தாவாகும் ஆர்வத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி, அனுமனின் ஆசியுடன் உபாசனாவும் ராம்சரனும் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து ராம்சரண், உபாசனா ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.