கனடிய தமிழ் பெண் ஒரு பெரிய லாட்டரி சீட்டை வென்று மகிழ்ச்சியைக் கண்டார்.
ஒடியோனாரியோ பிராம்டன் பகுதியை சேர்ந்தவர் சீலவதி செந்தில்வேல், 25 வருடங்களாக லாட்டரியில் பங்குபற்றிய மூன்று பிள்ளைகளின் தாய்.
இந்நிலையில் சமீபத்தில் சீலவதிக்கு 6/49 லாட்டரியில் 2வது பரிசாக $54,885 (ரூ.1,47,03,551.36) விழுந்தது. இதுவே அவரது முதல் பெரிய வெற்றியாகும்.
சீலாவதி கூறுகையில், வழக்கம் போல நான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என store-க்கு சென்று பார்த்தேன். அப்போது எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்கையில் ‘பிக் வின்னர்’ என பார்த்தபோது, மிகவும் உற்சாகமடைந்தேன், இதையடுத்து என் உடலே நடுங்கியது.
காரில் அமர்ந்திருந்த மகனுக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை உடனே தெரிவித்தேன். எங்கள் இருவராலும் நம்பவே முடியவில்லை.
OLG பரிசு மையத்தில் தனது பரிசுக் காசோலையை எடுக்கும்போது, சீலவதி, பரிசுத் தொகைக்கான உடனடித் திட்டங்கள் எதுவும் தன்னிடம் இல்லை, ஆனால் தன் குடும்பத்திற்கு உதவ விரும்புவதாகக் கூறினார்.