புதுமணத் தம்பதிகள் யானை முன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தது, யானையின் திடீர் நடத்தையால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் திருமண புகைப்படம், பத்திரிக்கைகள், திருமணம் தொடர்பான பல விஷயங்கள் புதுமையாக இருந்தால் நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கிறது.
எனவே, தம்பதிகள் போட்டோ ஷூட் செய்யும் போது நடக்கும் வேடிக்கையான விஷயங்கள் கூட சில நேரங்களில் இணையத்தில் வைரலாகி விடுகின்றன.
இதே போன்ற ஒரு சம்பவத்தை இங்கு காணலாம். கேரளாவில் புதுமணத் தம்பதிகள் யானையின் முன் நின்று படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.
அப்போது, யாருக்கும் தெரியாத வகையில், புதுமணத் தம்பதிகளின் பின்னால் நின்றிருந்த யானை, திடீரென தேங்காயை எடுத்து அவர்கள் மீது நேராக வீசியது.
மட்டை வந்த வேகத்தில் மாப்பிள்ளையின் முதுகில் லேசாக உரசி, அவருக்கும் மணப்பெண்ணுக்கு இடையே உள்ள இடைவெளி மூலம் வேறு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது.