சிம்பு அல்லது சிலம்பரசன் தமிழ் சினிமாவின் குட்டி சூப்பர் ஸ்டார் எஸ்டிஆர் என்று பரவலாக அறியப்படுகிறார். அவர் தனது தந்தை டி. ராஜேந்தர்குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் அடுத்தடுத்த படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
அந்த நேரத்தில், நடிகை நயன் தாராவுடன் காதல், ஹன்சிகாவுடனான காதல், சக நட்சத்திரங்களுடனான நெருக்கம் உட்பட பல காதல் மற்றும் தோல்வியுற்ற சர்ச்சைகளில் சிக்கினார்.
40 வயதைக் கடந்த சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அப்படி சமீபத்தில் சிம்புவுடன் நடித்த நித்தி அகர்வாலை திருமணம் செய்யவுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து அவரது தந்தை டி ராஜேந்தர் பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், என் மகனுக்கு பிடித்த மணப்பெண்ணை தேர்வு செய்ய என்னைவிட என் மனைவியைவிட சிம்புவுக்கு தான் பெண்ணை பிடிக்க வேண்டும்.
எனவே, என் குடும்பத்திற்கும், குலமகளை, அந்த கலைமகளை, என் இல்லத்திற்கு ஏற்ற திருமகளை தேர்வு செய்ய இறைவன் கையில் தான் இருக்கிறது. சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். இறைவன் அருளால் அது நடக்க வேண்டும் என்றார்.