நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வினோத், வசுமதி தம்பதிக்கு கடந்த 23 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. வினோத், பொறியியல் பட்டதாரியான வசுமதியை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வசுமதி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதிர்ச்சியடைந்த வசுமதி குடும்பத்தினர், சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வினோத் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அடுத்த சில நாட்களில் கணவன்-மனைவி இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் வசுமதி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினரும் புகார் அளித்தனர். மகளின் தற்கொலைக்கு காரணமான நபரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.