Other News

தொடர்ந்து பல்லியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றதா?இதை படியுங்கள்

வீடுகளில் பல்லி அதிகமாக இருக்கும். அவ்வாறு இருக்கக்கூடிய இந்த பல்லிகள் கதவு திறக்கும் இடங்களிலும், ஜன்னல் ஓரங்களிலும் இருந்து நம்மை பயமுறுத்தும்.

சில நேரங்களில் வீட்டில் பயங்கரமாக ஒருவித சத்தத்தை வீட்டில் எழுப்பி கொண்டும் இருக்கும்.

சில சமயத்தில் இந்த பல்லிகள் நம் மீது விழுவதும் உண்டு. அப்படிப்பட்ட இந்த பல்லி பல்லி சத்தமிடும் திசைகளை வைத்து அதன் பலனை நம் முன்னோர்கள் கூறக்கேட்டிருப்போம்.

தென்மேற்கு திசை: வீட்டின் குபேர முலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் விருந்தினர்கள் வருவார்கள். அதாவது அப்பா , அம்மா உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகை உண்டாகும். அதனால் நன்மை ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று அர்த்தம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தென்கிழக்கு திசை: அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தம் போட்டால் வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்பு உண்டு. மேலும் சில நாள்களில் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வரலாம் என்று அர்த்தம்.

கிழக்கு திசை: கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல.

வடக்கு திசை: வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button