23.9 C
Chennai
Tuesday, Oct 15, 2024
Rajinikanth 1 1

ரஜினியை வேதனைபடுத்திய நடிகர்! முதல்ல அவர் எனக்கு வில்லனா நடிக்கட்டும் அப்புறம் நான் நடிக்கிறேன்..

ரஜினி சும்மா இல்லாம அரசியலுக்கு வருவது பற்றி கருத்து சொல்லிட்டே இருக்க அதில் ரசிகர்கள் மட்டும் இல்லை சில நடிகர்களும் வருத்தத்தில்தான் இருந்தனர். மேலும் ரஜினி கூட நடித்த ஒருவர் மூஞ்சில் அடித்தது போல் பேசி உள்ளாராம்.

சிவாஜி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சுமன் நடித்திருப்பார். ஆனால் முதலில் இயக்குனர் ஷங்கர் ரஜினியிடம் கதை கூறிய பின் மிகவும் பிடித்துவிட்டதாம். இதில் வில்லன் ரோல் யார் செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார், அதற்கு ஷங்கர் சத்யராஜை கன்ஃபார்ம் செய்யலாம் என்று இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆஹா சூப்பர் கண்டிப்பாக கேளுங்கள் என்று தெரிவித்தாராம் ரஜினிகாந்த்.

உடனே ஷங்கர் சத்யராஜை சந்தித்து கதையைக் கூறியுள்ளாராம், கதை கூறிய பின் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து விட்டாராம். அதுமட்டுமில்லாமல் எனக்கு முதலில் வில்லனாக ரஜினியை நடிக்க சொல்லுங்கள், பின் நான் அவருக்கு வில்லனாக நடிக்கிறேன் கூறிய சம்பவம் ஷங்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth 1 1

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாருடன் சத்யராஜ் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் வில்லனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அப்போது நீங்களே ஹைட் அண்ட் வெய்ட்டா ஸ்மார்ட்டா இருக்கீங்க ஏன் ஹீரோவா பண்ணக்கூடாது என்று அட்வைஸ் கூறினாராம் ரஜினிகாந்த். இதனை சத்யராஜே ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருப்பார்.

ஒரு காலத்தில் சத்யராஜ் மேல் அக்கறை வைத்திருந்த ரஜினியை இப்படி மூஞ்சில் அடித்தது போல் பேசியது எல்லாம் சரி அல்ல என்றே சில நண்பர்களும் கூறுகின்றனர். எல்லாத்துக்கும் காரணம் ரஜினியின் அரசியல் கருத்துக்களும், அவர் கன்னடர் என்பதும்தான்.

அவருட படத்தில் நடிக்க முடியாது என்றால் சாரி வேண்டாம் என்று சொல்லி விட்டு விடலாம் ஆனால் வார்த்தைகளில் காயபடுத்துவது தமிழர் பண்பாடே அல்ல.